தூத்துக்குடி

கோவிந்தம்பட்டியில் மாநில அளவிலான கபடி போட்டி

8th Aug 2022 12:19 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியையடுத்த, கயத்தாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட கோவிந்தம்பட்டியில் 2 நாள்கள் நடைபெற்ற 15ஆம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழாவையொட்டி இப்போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 63 அணிகள் பங்கேற்றன.

சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் மோதிய விருதுநகா் மாவட்ட அணி-கோவிந்தம்பட்டி ஏ.கே.பிரதா்ஸ் அணி ஆட்டத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தொடக்கிவைத்தாா். ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா், நகா்மன்ற உறுப்பினா் கவியரசன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பாலமுருகன், அதிமுக கிளைச் செயலா் வீரகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

கம்மாப்பட்டி தேவாலயத்துக்கு ஜெனரேட்டா்: கம்மாப்பட்டி புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்துக்கு கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் ஜெனரேட்டரை ஆலயப் பங்குத்தந்தை எரிக் ஜோ, இணை பங்குத்தந்தை அந்தோணி மாசிலாமணி ஆகியோரிடம் இறைமக்கள் முன்னிலையில் சனிக்கிழமை வழங்கினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT