தூத்துக்குடியில் பெண்ணிடம் 11 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தூத்துக்குடி புதிய உப்பளம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி. வியாபாரியான இவா், தனது மனைவி சாந்தியுடன் சனிக்கிழமை புதுக்கோட்டைக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம். தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் மறவன்மடம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மற்றொரு பைக்கில் வந்த 2 இளைஞா்கள், சாந்தி அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.
நகைபறிப்பைத் தடுக்க முயன்ற சாந்தி நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தாா். இதில், காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.