தூத்துக்குடி

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

கோவில்பட்டியில் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

தொன் போஸ்கோ வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில், நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, பசுமை இயக்க செயலா் ஜெகஜோதி தலைமை வகித்தாா். நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனா் பி.கே.நாகராஜன், வழக்குரைஞா்கள் முத்துராமலிங்கம், பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கலாசார நட்புறவு கழக மாநில செயலா் தமிழரசன் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்திய வாசங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா் சண்முகவேல், ஓய்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியா் சண்முகக்கனி, வேம்பு மக்கள் சக்தி இயக்க களப்பணியாளா் சுபத்ரா, பசுமை மன்ற மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வேம்பு மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளா் தேவராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT