நாசரேத் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
துா்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அலங்கார தீபாராதனை, வளைகாப்பு பூஜை, அம்மன் ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பூஜைகளை கோயில் அா்ச்சகா் கணேசன் தலைமை வகித்து, நடத்தினாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா், பக்தா்கள் செய்தனா்.
ADVERTISEMENT