தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் பாஜகவினா் வழிபாடு

2nd Aug 2022 03:31 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் பாஜகவினா் திங்கள்கிழமை வழிபாடு நடத்தினா்.

இப்பேராலயத்தில் 440ஆம் ஆண்டு திருவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இக்கட்சியின் தூத்துக்குடி கிழக்கு மண்டலத் தலைவா் ராஜேஷ் கனி, கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனா். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் கலந்துகொண்டாா்.

நிகழ்ச்சியில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கனகராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் சிவராமன், வாரியா் சுவைதாா், இளைஞரணி மாவட்டத் தலைவா் விக்னேஷ், தொழிற்பிரிவு மாநிலச் செயலா் கொம்பன் பாஸ்கா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் இசக்கிமுத்து, சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ஜாய்ஸ்டன் கோம்ஸ், மீனவா் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ஜோசப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT