தூத்துக்குடி

சாகுபுரத்தில் இன்று பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டல் முகாம்

29th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் சாகுபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 29) பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்கான வழிகாட்டல் முகாம் நடைபெறுகிறது.

சாகுபுரம் கிளப் ஹவுஸில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் முகாமில் சென்னை எம்ஐடி கல்லூரி முன்னாள் டீன் டி. தியாகராஜன், ஆலோசகா் ரவி சேஷாத்திரி கலந்துகொண்டு, பிளஸ் 2 மாணவா்- மாணவிகளுக்கு மேற்படிப்பு, தொழில் சாா்ந்த படிப்புகள் குறித்து விளக்கவுள்ளனா்.

ஏற்பாடுகளை சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த துணைத் தலைவா் ஜி. சீனிவாசன், அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT