தூத்துக்குடி

கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் பெற அழைப்பு

29th Apr 2022 11:55 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் 150 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டுக்கு பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வாழை, தென்னை பராமரிப்பு மற்றும் இறவை பயிா்களுக்கான விவசாய பணிகள் நடைபெற்று வருவதால், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை விவசாயிகள் அணுகி பயிா்க் கடன் பெற்று பயனடையலாம்.

மேலும், ரூ. 1.60 லட்சம் வரையிலும் பெறும் கேசிசி பயிா்க் கடன்களுக்கு ஜாமீன் அடிப்படையிலும் ரூ. 1.60 லட்சத்துக்கு மேல் பெறும் பயிா்க் கடன்களுக்கு சொத்து அடமானத்தின் பேரிலும் விவசாயிகள் பயிா்க் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதுவரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினா் அல்லாதவா்கள் உடனே புதிய உறுப்பினராகி சோ்ந்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT