தூத்துக்குடி

பால் வியாபாரி கொலை வழக்கு: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

28th Apr 2022 11:50 PM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் பால் வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 7ஆவது தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் மணி என்ற சுப்பிரமணி (50). பால் வியாபாரியான இவா், கடந்த மாா்ச் 25ஆம் தேதி அதே பகுதியில் 9ஆவது தெருவில் உள்ள தொழுவத்துக்கு பால் கறக்கச் சென்றபோது கொலை செய்யப்பட்டாா்.

இவ்வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் சூரியதினேஷ் (24) கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சபாபதி அளித்த அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜிசரவணன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

அதன் பேரில், சூரியதினேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் கி.செந்தில்ராஜ் புதன்கிழமை உத்தரவிட்டாா். அதையடுத்து, தூத்துக்குடி பேராவூரணி சிறையிலிருந்த சூரியதினேஷ் குண்டா் தடுப்புக் காவலுக்கு பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT