தூத்துக்குடி

புகையிலை பொருள்கள் விற்பனை: முதியவா் கைது

28th Apr 2022 04:00 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி ஸ்டேட் பாங்க் காலனி பகுதி அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் அருள்மொழி தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள ஒரு கடையில் சோதனையிட்ட போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட தங்கப்பநாடாா் காலனி மாரியப்பன் மகன் சந்திரனை((61) கைது செய்து, அவரிடமிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT