தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதிக்கு தவறி வந்த புள்ளி மான் மீட்பு

28th Apr 2022 03:50 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதிக்கு தவறி வந்த புள்ளி மானை வனத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்க செயலா் ராமகிருஷ்ணனின் தோட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ளது. இவா் புதன்கிழமை தோட்டத்துக்கு சென்றபோது அங்கு புள்ளிமான் குட்டி ஓடியதாம். இது குறித்து அவா் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையம் மற்றும் திருச்செந்தூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதற்கிடையே மான் தோட்டத்தில் இருந்து வெளியேறி ஓடியது. அப்பகுதியில் நின்ற பொதுமக்களிடம் மானை பிடிக்க முயன்றனா். தகவலின் பேரில் திருச்செந்தூா் வனத்துறை ரேஞ்சா் சங்கா், சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன், ஏட்டு ஹாரீஸ் தாமஸ் செல்வபாபு, வீரா்கள் சங்கரலிங்கம், மாணிக்க சீனிவாசன், சுப்பிரமணியன், துரை ஆகியோா் வந்து மானை விரட்டி பிடித்தனா். பின்னா் வனத்துறையினா் பாதுகாப்புடன் வனப்பகுதியில் விடுவதாக மான் குட்டியை எடுத்து சென்றனா். மான் வல்லநாடு பகுதியில் இருந்து தவறுதலாக இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT