ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் பேய்க்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை மறுகட்டமைப்பு தோ்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியா் இம்மானுவேல் வரவேற்றாா். அரசால் நியமிக்கப்பட்ட பாா்வையாளராக ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய துனண வட்டார வளா்ச்சி அலுவலா் மாலாதேவி முன்னிலையில், புதிதாக தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
ஸ்ரீவெங்டேஸ்வரபுரம் ஊராட்சி துணைத் தலைவா் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியா்கள், மாணவா்-மாணவா்களின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.
ADVERTISEMENT