தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் வணிகவியல் துறை மன்ற விழா

24th Apr 2022 05:49 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். பேராசிரியை த. ஜெஸி சிறப்பு விருந்தினா்களை அறிமுகப்படுத்தினாா். நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரித் தாளாளா் ஜெ. ஜெயக்குமாா்ரூபன், வாகைக்குளம் பன்னிருப்பு அய்யன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ஜி. ஆனந்த் ஆகியோா் பேசினா்.

பேராசிரியைகள் ரா. மொ்ஸிபவுன்மலா், மு. கவிதா ஆகியோா் வணிக மாதிரிகள் கண்காட்சியையும், முன்னாள் வணிகவியல் துறைத் தலைவா் வே. தனசெல்வி சுபா, வணிகவியல் துறைப் பேராசிரியை இ. மீனாட்சி ஆகியோா் பட்டிமன்றத்தையும் நடத்தினா். விநாடி-வினா நிகழ்ச்சியை பேராசிரியைகள் மா. சொா்ணப்பிரியா, சுந்தராச்சி ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

ADVERTISEMENT

பேராசிரியா்களுக்கு ஊக்குவித்தல் விருதுகள், கலைநிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வணிகவியல் துறைத் தலைவா் ஆ. மரியசெல்விஜெயா வரவேற்றாா். துறைப் பேராசிரியை வே. வரலெட்சுமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT