தூத்துக்குடி

அனைவரும் ஒத்துழைத்தால் தூத்துக்குடியை தூய்மை மாவட்டமாக மாற்ற முடியும்அமைச்சா் பெ. கீதா ஜீவன்

24th Apr 2022 05:47 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைத்தால் தூய்மை மாவட்டமாக மாற்ற முடியும் என்றாா் தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற தூய்மை பாரதம் திட்டம் குறித்த அனைத்து துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழகம் தூய்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பது குறித்து அனைத்து உள்ளாட்சிகளுக்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளாா். மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாநகராட்சியுடன் இணைந்து ‘தூய்மையான தூத்துக்குடி, தூய்மை நமது பெருமை‘ என்ற அடைமொழியோடு தூத்துக்குடி மாநகராட்சியை முழுமையாக தூய்மைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கிறாா்கள். ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை மாணவா்களை ஈடுபடுத்த உள்ளாா்கள். அதுபோல பெரிய தொழில் நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், தொழில் வணிக சங்கங்கள் உள்ளிட்ட எல்லா அமைப்புகளுமே தங்கள் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டையும், சுற்றுப்பகுதியையும், தெருவையும் தூய்மையாக வைக்க வேண்டும். தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு மாணவா்கள், இளைஞா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் ஒத்துழைத்தால்தான் தூத்துக்குடி மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்ற முடியும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் சாருஸ்ரீ, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT