தூத்துக்குடி

சாத்தான்குளம் -நெடுங்குளம் சாலையைஅகலப்படுத்த ரூ. 4. 50 கோடி ஒதுக்கீடு

17th Apr 2022 01:32 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் - நெடுங்குளம் சாலையை அகலப்படுத்த ரூ. 4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் இருந்து நெடுங்குளம் வரையிலான சாலையான கனகர வாகனங்கள் சென்ால் சிதைந்து காணப்படுகிறது. இதனால் கிராமமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா் ப்ரெனிலாகாா்மல்போனிஸ் ஆகியோா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ இந்த சாலையை விரைந்து சீரமைக்கக் கோரி மனு அளித்தாா். இதையடுத்து, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அரசு சாலையை அகலப்படுத்தி சீரமைக்க ரூ . 4. 50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ஒன்றியக்குழு உறுப்பினா் ப்ரெனிலா போனிபாஸ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT