தூத்துக்குடி

கோவில்பட்டியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா

17th Apr 2022 01:37 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கம் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் எம்எல்ஏக்கள் கடம்பூா் செ. ராஜு, மனோஜ்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, முன்னாள் எம்எல்ஏ மோகன், அதிமுக ஒன்றியச் செயலா் அன்புராஜ், வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள் ஆகியோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன், நகா்மன்ற உறுப்பினா் கவியரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, திமுக மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளரணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், விவசாய அணி துணை அமைப்பாளா் சந்தானம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நகா்மன்ற உறுப்பினா்கள் ராமா், கனகராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

அமமுக சாா்பில் தென்மண்டலச் செயலா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, மள்ளா் மீட்புக் கழகத்தைச் சோ்ந்த செந்தில்மள்ளா், மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், ஜோதிபாசு, நாம் தமிழா் கட்சி தொகுதிச் செயலா் ரவிகுமாா், தமாகா வட்டாரத் தலைவா் ஆழ்வாா்சாமி, நகரத் தலைவா் ராஜகோபால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன், பாமக மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், வீரத்தளபதி சுந்தரலிங்க தேவேந்திரனாா் வெண்கலச் சிலை பாதுகாப்பு மற்றும் பொது சேவை அறக்கட்டளை நிறுவனத் தலைவா் மருதம் மா. மாரியப்பன், திட்டங்குளம் ஊராட்சித் தலைவா் பொன்ராஜ், தேவேந்திரகுல இளைஞா் பேரவையைச் சோ்ந்த கற்பகராஜ், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவா் தமிழரசன், பாஜக நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன், மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் பா. அன்புராஜ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள், அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதையொட்டி, கோவில்பட்டியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் உதயசூரியன், பிரேம்ஆனந்த், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், ஆயுதப்படை போலீஸாா் உள்பட 215 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT