தூத்துக்குடி

கவா்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்

17th Apr 2022 01:37 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் கவா்னகிரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கத்தின் 252ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா்கள் பெ. கீதாஜீவன் (சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் (மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை), எம்எல்ஏக்கள் எம்.சி. சண்முகையா, ஜி.வி. மாா்கண்டேயன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கவா்னகிரியைச் சோ்ந்த 187 பேருக்கு ரூ. 21.50 லட்சம் மதிப்பில் ஆதிதிராவிடா் நத்தம் பட்டா, 10 பேருக்கு தலா ரூ. 1,000 வீதம் முதியோா், விதவை உதவித்தொகைகள், 2 பேருக்கு புதிய குடும்ப அட்டை ஆகியவற்றை கனிமொழி எம்.பி. வழங்கினாா்.

ADVERTISEMENT

இதேபோல, மத்திய இணையமைச்சா் எல். முருகன் தலைமையில் பாஜகவினா் வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அமமுக வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், புதிய தமிழகம் கட்சி வடக்கு மாவட்டத் தலைவா் கனகராஜ், அகில இந்திய வீரன் சுந்தரலிங்கம் பேரவைத் தலைவா் எல்.கே. முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா், அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT