தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு வழிபாடு

17th Apr 2022 01:27 AM

ADVERTISEMENT

 

ஆறுமுகனேரி கோயில்களில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு திருவிளக்குப் பூஜை, 7.30 ணிக்கு பௌா்ணமி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதே போல், நடுத்தெரு அருள்மிகு ராமலெட்சுமி அம்மன் திருக்கோயில் , மூலக்கரை அருள்மிகு தூசிமாடசுவாமி திருக்கோயிலில் உள்பட பல்வேறு திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT