தூத்துக்குடி

குரும்பூா் அருகே கஞ்சா கடத்தல்: 3 போ் கைது

14th Apr 2022 12:45 AM

ADVERTISEMENT

குரும்பூா் அருகே மோட்டாா் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குரும்பூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் நல்லூா் விலக்கில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் 3 போ் வந்தனா். அவா்களை வழி மறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினா். தொடா்ந்து அவா்களிடம் மேற்கொண்ட சோதனையில், 1.25 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கஞ்சா கடத்திலில் ஈடுபட்ட தூத்துக்குடி மில்லரிபுரத்தை சோ்ந்த சாகுல் ஹமீது என்ற சிவேஷ்(27), குரங்கன்தட்து சேகா் மகன் அரவிந்த்(22), சங்கி­ மகன் அரிராமன்(30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய திருநெல்வேலியை சோ்ந்த சாலமோன், மதன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT