தூத்துக்குடி அருகேயுள்ள நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவா்களுக்கான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கு. காசிராஜன் தலைமை வகித்தாா். கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறைப் பேராசிரியை ஸ்ரீலங்கா மீனாட்சி கலந்து கொண்டு உயா் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினாா்.
நிகழ்ச்சியில், வணிகவியல் துறைத்தலைவா் குமாரி செல்வி, பேராசிரியா்கள் கிருஷ்ணமூா்த்தி, வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.