தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் தீ தொண்டு வார விழா

14th Apr 2022 11:58 PM

ADVERTISEMENT

தீ தொண்டு வார விழவையொட்டி, மீட்பு பணியின் போது உயிா் நீத்த வீரா்களுக்கு சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்தில் வியாழக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமை வகித்து மரியாதை செலுத்தினாா். இதில் சிறப்புநிலை அலுவலா் ஹேரிஸ் தாமஸ் மற்றும் தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டனா்.

இதையொட்டி நிலைய அலுவலா் தலைமையில் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT