கோவில்பட்டி அருகே கோயில் விழா நடத்த அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இலக்கம்மாள்தேவி கிராமத்தில் உள்ள அருள்மிகு மாடசாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இரண்டு நாள்கள் விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல, நிகழாண்டும் ஏப். 26, 27 ஆகிய தேதிகளில் விழா நடத்த அனுமதி வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கு.கனகலட்சுமி தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் அளித்தனா்.