கோவில்பட்டியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் மழை கொட்டித்தீா்த்தது.
கோவில்பட்டியில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை காலை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், பிற்பகல் 3.10 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது.
இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக,பசுவந்தனை சாலை, வக்கீல் தெரு ஆகிய பகுதிகளில் வாருகால்கள் தூா்வாராமல் இருந்ததையடுத்து, மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீா் சூழ்ந்ததினால் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாமல் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
இதுபோல, கயத்தாறு, காமநாயக்கன்பட்டி, கடம்பூா் ஆகிய பகுதிகளிலும் புதன்கிழமை மழை பெய்தது.