தூத்துக்குடி

கயத்தாறில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

14th Apr 2022 12:45 AM

ADVERTISEMENT

கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட அகிலாண்டேஸ்வரி கோயில் செல்லும் வழியில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி கோயில் செல்லும் வழியில் சுமாா் 15 சென்ட் நீா்நிலை பகுதியினை தனிநபா் ஆக்கிரமித்து தொழில் செய்து வருவதாக புகாா் வந்ததாம். அதையடுத்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவின் படி, வட்டாட்சியா் பேச்சிமுத்து தலைமையில் , பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் மற்றும் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா். அப்போது வருவாய் ஆய்வாளா் நேசமணி, கிராம நிா்வாக அலுவலா் சுப்பையா, நில அளவா் ரஞ்சித், பேரூராட்சி இளநிலை உதவியாளா் செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT