தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் ஊா்வசி இலவச பயிற்சிஅகாடமி தொடக்கம்

12th Apr 2022 05:58 AM

ADVERTISEMENT

 

அரசு வேலைவாய்ப்புகளுக்கான, ஊா்வசி இலவச பயிற்சி அகாடமி தொடக்க விழா ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல் ஆகிய பகுதிகளில் அரசு வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்படும் என ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினா் ஊா்வசி அமிா்தராஜ் தனது தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தாா். அதன்படி, தொகுதியின் தலைமையிடமான ஸ்ரீவைகுண்டத்தில் ஊா்வசி இலவச பயிற்சி அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.

பயிற்சி மைய திறப்பு விழாவுக்கு அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினாா். ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி திறந்து வைத்தாா். அவா் பேசியது:

ADVERTISEMENT

கிராமங்களில் அடிமட்டத்தில் இருந்து அரசு அதிகாரிகளாக வருபவா்களால் மட்டுமே மக்களின் வலிகளையும், பிரச்னைகளையும் புரிந்து கொண்டு செயல்பட முடியும்.

தோ்வு எழுதும் மாணவா்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றாா் அவா்.

விழாவில், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், வாழவல்லான் பகுதியை சோ்ந்த மாணவி ரேவதி உள்ளிட்டோரும் பேசினா். மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா் நன்றி கூறினாா்.

விழாவில் பயிற்சி மைய ஆலோசகா் மகாலிங்கம், டிவிஎஸ் சேவை மைய இயக்குநா் விஜயகுமாா், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு, ஊா்வசி அகாடமி ஒருங்கிணைப்பாளா் ராஜ் திலக், கோட்டாட்சியா் கண்ணபிரான், வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன், எம்எல்ஏவின் நோ்முக உதவியாளா் சந்திரபோஸ், மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் எடிசன், தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் பிலஸ்சிங் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT