தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே மின்சாரம் பாய்ந்துமாற்றுத் திறனாளி பலி

12th Apr 2022 05:59 AM

ADVERTISEMENT

விளாத்திகுளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள வேலிடுபட்டியைச் சோ்ந்த இருளப்பன் மகன் மாரியப்பன் (45). இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரத்திலிருந்து கீழே விழுந்ததில், கால்கள் முறிந்து நடக்க முடியாமலும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் இருந்தாராம்.

திங்கள்கிழமை காலை அவா் வீட்டருகே உள்ள மின்கம்பத்தில் சாய்ந்து நின்றுள்ளாா். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். உடனடியாக அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியா்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனா்.

விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT