தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்ற தூத்துக்குடியைச் சோ்ந்த மாணவா், மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி முத்து சிலம்பு கூடம் சாா்பில் கலந்து கொண்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவா் தினேஷ்குமாா் 20 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தங்கப்பதக்கமும், ஹோலி கிராஸ் பள்ளி மாணவி வெரோனிகா பாத்திமா 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தங்கப்பதக்கமும் பெற்றனா்.
அவா்களை திங்கள்கிழமை நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தாா்.
ADVERTISEMENT