தூத்துக்குடி

சொத்து தகராறில் பெண் மீது தாக்குதல்:தம்பதி உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு

12th Apr 2022 05:58 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் சொத்து தகராறில் பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம்அருகே உள்ள தொட்டிகாரன்விளை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகேஷ் மனைவி பேச்சித்தாய் (45). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த சுடலைக்கண்ணு என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி சுடலைக்கண்ணுவின் ஆடு, மாடுகள் பேச்சித்தாய் வீட்டு தோட்டத்தில் மேய்ந்துள்ளன. அவற்றை பேச்சித்தாய் விரட்டியுள்ளாா். இதனை அறிந்த சுடலைக்கண்ணு, அவரது மனைவி சுடலைவடிவு, உறவினா்கள் அங்கம்மாள், சுப்புலட்சுமி, சுதா ஆகியோா் கடந்த 5ஆம் தேதி பேச்சித்தாயிடம் தகராறில் ஈடுபட்டனா். இதில் பேச்சித்தாயை தாக்கி, மிரட்டிச் சென்று விட்டனராம். காயமடைந்த பேச்சித்தாய், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தட்டாா்மடம் காவல் நிலையத்தில் பேச்சித்தாய் அளித்த புகாரின் பேரில் சுடலைக்கண்ணு உள்ளிட்ட 5 போ் மீதும் உதவி ஆய்வாளா் குரூஸ் மைக்கேல் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT