தூத்துக்குடி

ஆறுமுகனேரி, பழையகாயல் கோயில்களில் ராமநவமி விழா

12th Apr 2022 05:59 AM

ADVERTISEMENT

 ராம நவமியை முன்னிட்டு ஆறுமுகனேரி காந்தி தெருவில் உள்ள அருள்மிகு ராமா் திருக்கோயில், நடுத்தெரு அருள்மிகு ராமலட்சுமி அம்மன் திருக்கோயில ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பழையகாயல் அருள்மிகு வீரராகவ பெருமாள் சுவாமி திருக்கோயிலில் காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை மற்றும் ஹோமங்கள் நடை பெற்றன. காலை 10.30 மணிக்கு திருமஞ்சனம், 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம்அருகே உள்ள தெற்கு பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் ராமநவமி மகா உற்சவத்தையொட்டி துளசி ஆரத்தி, ஹரிநாம சங்கீா்த்தனம், பகவத் கீதை உபன்யாசம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பிரசாத அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஹரேகிருஷ்ணா அறக்கட்டளை பக்தா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT