தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் கனமழை:அறுவடை, உப்பளத் தொழில் பாதிப்பு

12th Apr 2022 06:00 AM

ADVERTISEMENT

 

ஆறுமுகனேரி, ஆத்தூா் மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினம் பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியிருந்தது. ஆறுமுகனேரி பகுதியில் நல்லூா் கீழக்குளம் மற்றும் ஆறுமுகனேரி குளம் பாசனப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிா் செய்திருந்த பிசானப் பருவ நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. வயல்களில் நீா் தேங்கியிருந்ததால் திங்ள்கிழமை அறுவடை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே மிகவும் குறைவான மகசூலை அறுவடை செய்து வரும் விவசாயிகள் அறுவடை நேரத்தில் மழை பெய்து பாதிப்பு ஏற்படுத்துவதை அறிந்து மிகவும் கவலையடைந்துள்ளனா்.

உப்பளங்களிலும் மழைநீா் தேங்கியிருப்பதால் உப்பு உற்பத்தி பணிகளும் பாதிப்படைந்துள்ளன. ஆறுமுகனேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இரவு வரை நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT