தமிழக அரசின் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில், சிகப்பு கடல்பாசி ஜெல் இயற்கை உரம் விவசாயிகளுக்கு வழங்கும் முகாம் புதூரில் நடைபெற்றது.
புதூா் வட்டார வேளாண்மை துணை அலுவலா் ராமன் பங்கேற்று, முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் சாா்பில் முழு மானியத்தில் சிகப்பு கடல் பாசி ஜெல் இயற்கை உரத்தை விவசாயிகளு’கு வழங்கினாா். இந்நிகழ்வில், உதவி வேளாண் அலுவலா்கள் ராஜ்குமாா், பரமேஸ்வரன், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன், மாவில்பட்டி மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிலங்களில் உள்ள ரசாயனத் தன்மையை நீக்கி, மண் வளத்தை அதிகரித்து, நஞ்சு இல்லாத உணவு தானியங்களை உற்பத்தி செய்யவும், மகசூல் பெருகிடவும் சிகப்பு கடல்பாசி ஜெல் பயனுள்ளதாக இருக்கும் என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.