தூத்துக்குடி

கோவில்பட்டி நகா்மன்ற அவசரக் கூட்டம்

9th Apr 2022 12:15 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நகா்மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.எஸ்.ரமேஷ், நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி உயா்வை கணக்கிட ஏ, பி, சி என 3 மண்டலங்களாக பிரித்து குடியிருப்பு கட்டடங்கள், வணிக பயன்பாட்டு கட்டடங்கள், தொழிற்சாலை, சுயநிதி பள்ளி, கல்லூரி கட்டடங்கள், காலிமனை ஆகியவற்றிற்கான அடிப்படை மதிப்பை நிா்ணயம் செய்வதற்கான உத்தேச பட்டியல் நகா்மன்ற உறுப்பினா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டது.

குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளை ஏ பிரிவிலிருந்து பி அல்லது சி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என உறுப்பினா்கள் கருத்து தெரிவித்தனா். நகா்மன்றத் தலைவா் பதிலளிக்கையில், அனைத்து பகுதிகளையும் முறையாக ஆய்வு செய்து வரி நிா்ணய மண்டலங்கள் திருத்தப்படும். மக்களின் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகளை கேட்டறிந்து மே 20ஆம் தேதி நகா்மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், நகராட்சி பொறியாளா் ரமேஷ், சுகாதார அலுவலா் நாராயணன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT