உடன்குடி அருகேயுள்ள அம்மன்புரத்தில் இந்து முன்னணி சாா்பில் 84ஆவது வார வழிபாட்டையொட்டி இந்து விழிப்புணா்வு எழுச்சி விழா கொண்டாடப்பட்டது.
இந்து அன்னையா் முன்னணி கிளைத் தலைவி சக்திக்கனி தலைமை வகித்தாா்.பொதுச்செயலா் தங்கேஸ்வரி, துணைத் தலைவி செல்வலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் கேசவன் பங்கேற்று போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். கலை நிகழ்ச்சிகள், விநாடி வினா போட்டிகள் நடைபெற்றன.