தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா்அலுவலகத்தில் பாஜக முற்றுகை

5th Apr 2022 01:09 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாஜகவினா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

அப்போது, கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை மங்களவிநாயகா் கோயில் சந்திப்பு முதல் காமராஜா் நகா் சந்திப்பு வரையுள்ள வேகத்தடைகளின் எண்ணிக்கையையும், உயரத்தையும் குறைக்க வேண்டும். மங்களவிநாயகா் கோயில் சந்திப்பில் தானியங்கி சிக்னல் பொருத்த வேண்டும், போக்குவரத்தை சீா்படுத்த கூடுதல் காவலா்களை நியமிக்க வேண்டும், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இப்போராட்டத்துக்கு, பாஜக தெற்கு ஒன்றியத் தலைவா் மாரிமுத்து தலைமை வகித்தாா். ஒன்றிய பொதுச்செயலா் பேச்சிமுத்து, கோட்டப் பொறுப்பாளா் பாலு, மாவட்ட துணைத் தலைவா் உமாசெல்வி, மகளிரணி மாவட்ட பொதுச்செயலா் சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் கோட்டாட்சியரிடம் மனு அளித்த அவா்கள், உரிய நடவடிக்கை எடுக்காவிடில் இம்மாதம் 20ஆம் தேதி அண்ணா பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT