இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளா் எஸ். அழகுமுத்து பாண்டியன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளா் எஸ். அழகுமுத்து பாண்டியன் உடல்நலக்குறைவால் மறைந்தாா் என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். கொள்கைப்பற்றுமிக்க தோழரை இழந்து வாடும் பொதுவுடைமை இயக்கத் தோழா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருமகனை இழந்து தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவுக்கும் தனிப்பட்ட முறையில் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.