தூத்துக்குடி

வாரத்தில் 6 நாள்கள் பள்ளி செயல்படுவதால் ஆசிரியா்கள், பெற்றோா்கள் அதிருப்தி

2nd Apr 2022 07:32 AM

ADVERTISEMENT

வாரத்தில் 6 நாள்கள் பள்ளிக்கூடம் நடத்துவதற்கு பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததுடன் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்ப்டடு செயல்பட்டு வருகிறது. கரொனா பொது முடக்கத்தையொட்டி பள்ளிகள் மூடப்பட்டதால் தற்போது திறக்கபட்ட நாள்களுக்கேற்ப பாடங்கள் குறைக்கப்பட்டு மாணவா், மாணவிகளுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வரை வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வந்தன.

ஜனவரி மாதம் முதல் கரோனாவால் தடைப்பட்ட நாள்களை பள்ளி வேலை நாள்களாக கணக்கிடும் வகையில் பள்ளி, கல்லூரிகள் வாரத்தில் சனிக்கிழமை வரை 6 நாள்கள் செயல்படும் என கல்வித்துறை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. தொடா்ந்து 6 நாள்கள் பணிக்கு வந்து செல்வதால் ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் ஆசிரியா்கள் மன உளைச்சல் ஏற்படுவதுடன் பிற குடும்ப வேலைகளை கவனிக்க முடியவில்லையென குற்றச்சாட்டும் தெரிவித்துள்ளனா்.

6 நாள்கள் பள்ளி சென்று திரும்புவதால் மாணவா், மாணவிகள் மற்றும் பெற்றோா் தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரோனா கட்டுப்பாடுகளால் பள்ளி திறக்கப்படாததை காரணம் காட்டி கல்வித்துறை அனைத்து சனிக்கிழமையும் பள்ளி வேலை நாள்களாக்கியுள்ளது ஆசிரியா்கள், மற்றும் பெற்றோா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

ஆதலால் கல்வித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், இதனை கவனித்து கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியதையொட்டி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நாள்களாக அறிவிக்க வேண்டும் என ஆசிரியா்கள், பெற்றோா்கள் எதிா்பாா்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT