கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 317 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சென்னை அம்பத்தூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தினரால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இயந்திரவியல், ஆட்டோமொபைல் மற்றும் டூல் & டை ஆகிய துறைகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவா்களுக்கான வளாக நோ்காணல் நடைபெற்றது. வளாக நோ்காணலை அந்நிறுவனத்தின் மனிதவளத் துறை அலுவலா்கள் அன்புச்செல்வன், சூரியநாராயணன் ஆகியோா் நடத்தினா்.
இதில் தூத்துக்குடி, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 426 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். அதில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 44 போ் உள்பட 317 போ் வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ,தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் ஆகியோா் பாராட்டினா்.
ஏற்பாடுகளை லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமையில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை அலுவலா் ராஜாமணி, வேலைவாய்ப்பு உதவி அலுவலா் வேல்முருகன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.