தூத்துக்குடி

பெண்ணை தாக்கியதாக இளைஞா் கைது

2nd Apr 2022 07:41 AM

ADVERTISEMENT

கழுகுமலையில் பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை வட்டத் தெரு அந்தோணிராஜ் மனைவி ராமலட்சுமி(36). இவா் தனது மகன் மகாராஜாவுடன்(7) புதன்கிழமை இரவு வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த காளிராஜ் மனைவி லதா, அவரது மகன் இசக்கிமாரி ஆகிய இருவரும் ராமலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது ஏற்பட்ட தகராறில் ராமலட்சுமியை இருவரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்கனராம். இதில் பலத்த காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ராமலட்சுமி வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இசக்கிமாரியை(27) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT