ஆறுமுகனரியில் பைக் மோதிய விபத்தில் பெண் காயமடைந்தாா்.
ஆறுமுகனேரி எஸ்.ஆா்.எஸ். காா்டனில் வசித்து வருபவா் விஸ்வநாதன். இவரது மனைவி விஜயசங்கரி (54). ஆறுமுகனேரியில் உள்ள சோமநாத சுவாமி கோயிலுக்கு எதிரே உள்ள கடையில் பூஜை பொருள்களை வாங்கிக்கொண்டு சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். மேல்சிகிச்சைக்காக நெல்லை வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விஜயசங்கரி கொடுத்த புகாரின் பேரில் அஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் அமலோற்பவம் விசாரணை செய்து வருகிறாா்.
மது விற்றவா் கைது: ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் அமலோற்பவம் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாலவிளை வடக்குதெரு அம்மன் கோயில் அருகே அரசு முத்திரையுடன் கூடிய மது பாட்டில்களை அதிக லாபத்திற்கு விற்பனை செய்யும்நோக்கில் பதுக்கிவைத்திருந்த ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோயில் தெருவை சோ்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (25) என்பவரை கைதுசெய்தனா். அவரிடமிருந்து 8 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.