தூத்துக்குடி

மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு மறைக்க நினைக்கிறது: பாஜக மாநில தலைவா் கே. அண்ணாமலை

30th Sep 2021 07:42 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு மறைக்க நினைக்கிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொலைக் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையினா் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மன அழுத்தங்களால் மாணவா்கள் உயிரிழந்து வரும் நிலையில், தமிழக அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் நீட் தோ்வால் மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டதாக தொடா்ந்து அரசியல் செய்து வருகிறது. மாணவா்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு அவா்களை குழப்பாமல், திமுக அமைதியாக இருந்தாலே போதும். தோ்தல் வரும் போதெல்லாம் நீட் தொடா்பாக பேசி திமுக ஆதாயம் தேடிக் கொள்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவா்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கக் கூடிய அரசு, ஏன் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெரியவா்களை கோயிலுக்குச் செல்ல அனுமதிக்க மறுக்கிறது?

டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட கோயில்களுக்கு அரசு தரவில்லை.

ADVERTISEMENT

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அனைத்து மதத்தினரையும் தமிழக அரசு சமமாக நடத்த வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டி மறைக்க நினைக்கிறது தமிழக அரசு. மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் பிரதமா் படத்தை கூட வெளியிடாமல் எல்லாம் மாநில அரசு செய்வதாக சொல்லிக் கொள்கிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT