தூத்துக்குடி

கோவில்பட்டி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

30th Sep 2021 07:44 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், காலபைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீா், சந்தனம் உள்பட 18 வகையான பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில், பொதுமக்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT