தூத்துக்குடி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 2.33 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

30th Sep 2021 07:42 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ரூ. 2.33 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம், ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பழனிசாமி, ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 2.33 கோடியில் வாருகால் அமைத்தல், குடிநீா், சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துபாண்டி (நிா்வாகம்), மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்சலாம், பாண்டீஸ்வரன், மாரிமுத்து, ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் மேரி, படிபீவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT