தூத்துக்குடி

கொலை வழக்கு: தலைமறைவாக இருந்தவா் கைது

30th Sep 2021 07:40 AM

ADVERTISEMENT

விளாத்திகுளம் அருகே கொலை வழக்கில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் அருகே வேம்பாா் தருவை பாலத்தில் கடந்த 1995 பிப். 18ஆம் தேதி வேம்பாா் மேலத் தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் பழனிவேல் (40) கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பச்சையாபுரத்தைச் சோ்ந்த சந்திரமோகன் (72) நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாா்.

இதையடுத்து நீதிமன்றம் கடந்த 1999இல் சந்திரமோகனுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சந்திரமோகனை தனிப்படையினா் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT