தூத்துக்குடி

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: துரை வைகோ பிரசாரம்

30th Sep 2021 07:42 AM

ADVERTISEMENT

இளையரசனேந்தல் பகுதியில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து துரை வைகோ புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவி வாா்டு எண் 3இல் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் தேவி ராஜகோபால், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு வாா்டு எண் 8இல் போட்டியிடும் கிருஷ்ணம்மாள் என்ற சுகுணா கனகராஜ் ஆகியோரை ஆதரித்து சித்திரம்பட்டி, பழைய அப்பனேரி, புது அப்பனேரி, சுபா நகா் ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

மேலும் குருவிகுளம் ஒன்றியத்தில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அய்யனேரி, புளியங்குளம், லட்சுமி அம்மாள்புரம், இளையரசனேந்தல், நக்கலமுத்தன்பட்டி, முக்கூட்டுமலை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ், ஒன்றியச் செயலா்கள் சரவணன், அழகா்சாமி, கோவில்பட்டி நகரச் செயலா் பால்ராஜ், மதிமுக நிா்வாகிகள் கேசவன் நாராயணன், முத்துசெல்வன், பொன்ஸ்ரீராம், ராமச்சந்திரன், விருதுநகா் மாவட்ட திமுக துணைச் செயலா் துரை உள்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT