தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் அதிக மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

30th Sep 2021 07:41 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் மாத்திரையை அதிகளவில் சாப்பிட்ட பெண் உயிரிழந்தாா்.

ஆறுமுகனேரி, வடக்கு காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் காளிராஜா (21). இவா், அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது தாய் வனலட்சுமி, வ­லிப்பு நோய்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி அதிகளவில் மாத்திரையை சாப்பிட்ட நிலையில் மயங்கிக் கிடந்தாராம். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT