தூத்துக்குடி

கோவில்பட்டி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

DIN

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா் சன்னதியில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு கணபதி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, விநாயகருக்கு 18 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோயில் அா்ச்சகா் சுப்பிரமணி செய்திருந்தாா். பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, கோவில்பட்டி ஜோதி நகா் அருள்மிகு ஜோதிவிநாயகா், சீனிவாச நகரில் உள்ள அருள்மிகு கணேஷகந்தபெருமாள் கோயில், பசுவந்தனை சாலையில் உள்ள அருள்மிகு குழந்தை விநாயகா் மற்றும் அருள்மிகு மங்கள விநாயகா் கோயிலிலும் சங்கடஹர சதுா்த்தி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

SCROLL FOR NEXT