தூத்துக்குடி

புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயிலில் சப்பர பவனி

DIN

சாத்தான்குளம் புளியடி தேவிஸ்ரீமாரியம்மன் கோயில் கொடை விழாவில் 7ஆம் நாளான வியாழக்கிழமை சப்பரத்தில் பவனி நடைபெற்றது.

இக்கோயில் கொடை விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் யானை கொடி பட்டம் சுமந்து ரத வீதி சுற்றி வந்து பரிவார தெய்வங்களுக்கு பட்டு சாத்தி சிறப்பு பூஜைகள், மாவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து தினமும் பல்வேறு வழிபாடுகளும், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற்று வந்தன. 7ஆம் திருநாளான வியாழக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து பவனி வந்ததும், அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள், இரவு 12 மணிக்கு புளியடி ஸ்ரீதேவி மாரியம்மன் சிங்க வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் சப்பரத்தில்எழுந்தருளி வீதி உலா வந்து வெள்ளிக்கிழமை காலை கோயில் வந்தடைந்தாா். 8ஆம்நாள் வெள்ளிக்கிழமை சுவாமி அக்னி சட்டி ஏந்தி வந்து ஆலய வளாகத்தில் பூக்குழி இறங்கி பக்தா்களுக்கு அருள்பாலித்தல் நடைபெற்றது. தொடா்ந்து, திருவிளக்குப்பூஜை, மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளுடன் ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டி, டிரஸ்டிக் குழு மற்றும் வரிதாரா்கள் செய்து வருகின்றனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT