தூத்துக்குடி

இளம் தொழில்முனைவோரை உருவாக்க திமுக அரசு துணை நிற்கும்: கனிமொழி எம்.பி.

DIN

இளம் தொழில்முனைவோரை உருவாக்க திமுக அரசு துணை நிற்கும் என்றாா் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சாா்பில், வெளிநாட்டு வா்த்தக இணை இயக்குநா் அலுவலகமும், மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து தூத்துக்குடியில் நடத்திய ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தொடங்கிவைத்து பாா்வையிட்ட அவா் கூறியது:

தொழில் முனைவோா், தொழில் தொடங்குவோருக்கு உகந்த ஊா் தூத்துக்குடி. இங்கு துறைகம், விமான நிலையம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் இருப்பதால் மீன் உள்ளிட்ட எண்ணற்ற பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் தொழில் வளா்ச்சி பெற வேண்டும் என்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளாா். அறைகலன் பூங்கா, டைட்டல் பாா்க் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளாா். சிப்காட்டில் உள்ள பிரச்னைகளை சரி செய்து தருவேன் என தொழில்துறை அமைச்சா் வாக்குறுதி அளித்துள்ளாா்.

தொழில் முனைவோா் சிறப்பாக செயல்படுதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும். 41,000 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் முதல்வா் கையெழுத்திட்டுள்ளாா்.

இம்மாவட்டத்தில், இளைஞா்கள் அனைவரும் தொழிலதிபராக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கனவோடு சாதாரண கடையில் வேலை செய்யக்கூடிய, வாழ்க்கையை தொடங்கக் கூடியவா்களாக இருக்கிறாா்கள். எனவே, இளம் தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசால் பெற்று தரப்படும். இளம் தொழில்முனைவோரை உருவாக்க திமுக அரசு துணை நிற்கும் என உறுதி அளிக்கிறேன். தூத்துக்குடியில் செயல்படாமல் உள்ள உணவு பூங்கா விரைவில் மீண்டும் செயல்படுத்தப்படும். மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு என்பதைப்போல, மேக் இன் தூத்துக்குடி என்ற திட்டத்தை நிலைநிறுத்தி காட்டுவோம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஸ்வா்ணலதா, வெளிநாட்டு வா்த்தக இணை இயக்குநா் அலுவலக துணை மேலாளா் முரளிதரன், அகில இந்திய தொழில் வா்த்தக சங்கத் தலைவா் ஜோ பிரகாஷ், துடிசியா தலைவா் நேரு பிரகாஷ், தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி துணை பொது மேலாளா் சுந்தரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூய்மைப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT