தூத்துக்குடி

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு:கோட்டாட்சியா் ஆலோசனை

30th Oct 2021 03:31 AM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு தொடா்பான அனைத்துறை அலுவலா்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, கோட்டாட்சியா் மு.கோகிலா தலைமை வகித்து, பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைள் குறித்து உள்ளாட்சி, தீயணைப்பு, மருத்துவம், மின்சாரம், பொதுப் பணி மற்றும் காவல்துறையினரிடம் கேட்டறிந்தாா். மேலும், அனைத்துத் துறைகளும் தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துராமலிங்கம், திருச்செந்தூா் வட்டாட்சியா் இரா.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், காவல் ஆய்வாளா்கள் முரளிதரன், சுமதி, தீயணைப்பு நிலைய அலுவலா் ந.நட்டாா் ஆனந்தி, ஒன்றிய ஆணையாளா் ராணி, பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) பாபு, உதவி மின் பொறியாளா் முத்துராமன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், வெற்றிவேல்முருகன், வருவாய் ஆய்வாளா் மணிகண்டவேல் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT