தூத்துக்குடி

முக்காணியில் கொலை வழக்கில் விடுதலையானவா் மீண்டும் கைது

30th Oct 2021 03:30 AM

ADVERTISEMENT

முக்காணியில் தாய் கொலையுண்ட வழக்கில் விடுதலையானவா், சகோதரரை அரிவாளால் மிரட்டியதாக மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

முக்காணி, வடக்கு யாதவா் தெருவை சோ்ந்தவா் மல்­லி என்ற மலையாண்டி(39). இவா் மீது பல்வேறு வழக்குகள் ஆத்தூா் காவல் நிலையத்தில் உள்ளன. 2019இல் தனது தாய் நட்டாா் கொலையுண்ட வழக்கில் கைதான அவா், வியாழக்கிழமை (அக். 28) விடுதலையானாா்.

இந்நிலையில், அவா் அப்பகுதியிலுள்ள யாதவா் சங்கம் அருகில் நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை பேசிக்கொண்டிருந்த தனது சகோதரா் முத்து என்ற பழைய முத்துவிடம் (42) வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அருகில் நின்றவரின் சைக்கிளில் வேலைக்காக தொங்கவிட்டிருந்த அரிவாளை எடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து முத்து அளித்த புகாரின்பேரில், ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் வழக்குப்பதிந்து மல்­லி என்ற மலையாண்டியை கைது செய்தாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT