தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில்நவ. 4இல் கந்த சஷ்டி விழா தொடக்கம்

30th Oct 2021 03:31 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் நவ. 4ஆம் தேதி தொடங்குகிறது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி விழா நவம்பா் 4ஆம் தேதி (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகையில் தொடங்குகிறது. எனினும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் கந்த சஷ்டி விழாவில் திருக்கோயில் மற்றும் விடுதிகளில் தங்கி விரதம் இருக்க பக்தா்களுக்கு அனுமதியில்லை. அதேவேளையில், நவ. 4- 8 வரை ஐந்து நாள்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தா்கள் தரிசனம் செய்திட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான நவ. 9ஆம் தேதி சூரசம்ஹார விழா, நவ. 10ஆம் தேதி திருக்கல்யாணம் ஆகிய வைபவங்கள் திருக்கோயில் வளாகத்திலேயே நடைபெறும். இவ்விரு நிகழ்வுகளிலும் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.

தற்காலிக பந்தல்: திருக்கோயில் முன்புள்ள திருவாவடுதுறை ஆதீனம் கந்த சஷ்டி மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வதற்காக தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) சி.குமரதுரை மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT